2021 சட்டமன்றத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல் இதோ!

 

2021 சட்டமன்றத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல் இதோ!

அனைத்து மாநில சட்டமன்றத்தேர்தல்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வைக்க முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல் இதோ!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. முதற்கட்டமாக தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம், அதில் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தியது. அந்த பணிகள் முடிவடைந்து வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியிருப்பதால், தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல் இதோ!

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் உட்பட அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வைக்க தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வகை செய்ய இயலுமா? என்ற சட்டத்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், உரிய சட்ட விதிமுறைகளை கொண்டு வந்தால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது சாத்தியம்தான் என்றும் மின்னணு முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.