புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்!

 
Central Govt

மத்திய அரசு கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

court

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும்  5.65 லட்சம் போலீசார், சிறை, நீதித் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய உள்துறை மும்முரம் காட்டி  வருகிறது. அதே நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

court

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவைக்கு பதில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.