அதானியை குறிவைத்த ஹிண்டன்பர்க்... திவாலான SVB குறித்து அறியாதது ஏன்? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

 
svb

இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், தனது சொந்த நாட்டில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி குறித்து அறியாமல் இருந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியாக இயங்கி வந்தது கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட சிலிக்கான் வேலி வங்கி. இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதி உதவி வழங்கும் சேவையை செய்து வந்தது. .2022 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த நிலையில், அந்த வங்கி நிதி நிலை அறிக்கையில் உள்ள இடைவேளையை சரிகட்ட 2 பில்லியன் டாலர்கள் நிதி பெற திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. இதன் எதிரொலியாக 48 மணி நேரத்தில் அதன் பங்குகள் கடுமையாக சரிந்தன. வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது. இதனால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனால் சிலிகான் வேலி வங்கி திவாலானது.  இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

svb

இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமம்  முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், தனது சொந்த நாட்டில் உள்ள வங்கி திவாலாவதை எப்படி கணிக்க முடியாமல் போனது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதானி குழுமம் அதன் அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்தியுள்ளது, அதேசமயம் சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அதானியை ஒரு மோசடி என்று முத்திரையிட்டது, ஆனால் SVB பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி எவ்வளவு துல்லியமானது என்பதை இது காட்டுகிறது என விமர்சித்துள்ளனர். வேண்டுமென்றே பொய்யான அறிக்கைகள் மூலம் இந்திய நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தைச் சீரழிக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு அக்கம் பக்கத்திலுள்ள SVB பற்றித் தெரியாது, அதானி பற்றி மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தில் பிஸியாக இருந்ததால், அவர்களின் சொந்த நாட்டின் 'எஸ்விபி' திவாலானது பற்றி தெரியவில்லை. அவ்வளவு புத்திசாலியான ஹிண்டன்பர்க் ஏன் தங்கள் சொந்த நாட்டில் திவாலான SVB பற்றி மௌனம் சாதிக்கிறது? SVB இன் பங்கு வெறும் 2 நாட்களில் நாசமானது என்று விமர்சித்துள்ளனர்.