நேபாள பெருவெள்ளம் - இறப்பு எண்ணிக்கை 538ஆக உயர்வு!

 
s

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.

சிறப்பு-படம்

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் . திபெத்தில் 5 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ள நிலையில், இருநாடுகளிலும் சுமார் 1400க்கும் மேற்பட்டோரின் நிலை இன்னும் தெரியவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை தகவல்படி, நவல்பாசி கிழக்கில் இருந்து 134 உடல்களும், சிட்வானில் இருந்து 221 உடல்களும், கோர்காவில் இருந்து 46 உடல்களும், நுவாகோட்டில் இருந்து 37 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தாடிங்கில் இருந்து 33 உடல்களும், தனுவில் இருந்து 28 உடல்களும், நவல்பாசி மேற்கில் இருந்து 27 உடல்களும், ரசுவாவில் இருந்து 12 உடல்களும் மீட்கப்பட்டன.

பேரிடர் நடந்த மூன்றாவது நாளாக, 2,391 நேபாள இராணுவ வீரர்கள் உட்பட 7,451 பாதுகாப்புப் படையினர்  தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அப்பகுதியில் மற்றொரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்று தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) எச்சரிக்கை விடுத்துள்ளது.