நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது!

 
gg

 பிகார் மாநிலம் பாட்னாவில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மாணவர்கள் சிலர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.  அத்துடன் நீட் தேர்வு வினாத்தாளை விலைக்கு வாங்கியதை பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 
  
 

neet

இந்நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை கைது செய்தது சிபிஐ. 6 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

arrest

நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளனர்.