எம்டிஎஸ் நீட் தேர்வுக்கான (NEET-MDS 2022) விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்...

 
neet


முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வு 2022 விண்ணப்ப பதிவு இன்று தொடங்கும் என  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ், எம்.டி பி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.  அந்தவகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு (NEET-MDS 2022)  மார்ச் மாதம்  6-ம்  தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
இன்று  முதல் தேசிய தேர்வு முகமை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மாலை  மாலை 3 மணியளவில் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது.  மாணவர்கள் ஜனவரி 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.  அதேபோல் மார்ச் 6ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும்,  தேர்வு முடிவுகள் மார்ச் 21 ஆம் தேதி  வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி வழியில் (ஆன்லைன்) நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவு தேர்வர்கள் ரூ.4,425 தேர்வுக்கட்டணமாகவும், எஸ்.டி., எஸ்.சி பிரிவு மாணவர்கள்  ரூ.3,345 தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.