நீட் தேர்வு - ஒரே வாரத்தில் இரு மாணவர்கள் தற்கொலை!

 
Death

நீட் தேர்வு  பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.

neet

இந்நிலையில் ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கோட்டாவில் தங்கி படித்து வரும் 20 வயதுடைய கோபால் சிங் என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

neet

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஹரியானாவை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்தாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 10 மாணவர்கள் கோட்டாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.