நீட் தேர்வு குளறுபடி - தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

 
supreme court

நீட் தேர்வு குளறுபடி, முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீட் தேர்வு

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

supreme courtஇந்நிலையில் மே மாதம் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் அதனை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.