நீட் தேர்வு முறைகேடு - கைதானவர்களை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

 
cbi

 பிகார் மாநிலம் பாட்னாவில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மாணவர்கள் சிலர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது.

neet

அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.  அத்துடன் நீட் தேர்வு வினாத்தாளை விலைக்கு வாங்கியதை பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மாணவர் அனுராக்கின் மாமாவான பிஹார் தான்பூர் நகர அவையில் பொறியாளராக பணிபுரியும் சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்தின்  மூலம் தேர்வுக்கு முன்னதாகவே விடையுடன் வினாத்தாள் கிடைத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவர்களின் வீடுகளில் பீகார் போலீசார் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள்களை 30 முதல் 32 லட்சம் ரூபாய் விலையில் தங்களுக்கு விற்பனை செய்ததாகவும் மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

tt

இந்நிலையில் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் கைதான பல்தேவ் குமார், முகேஷ் குமார் ஆகியோரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அண்மையில் கைதான இருவரையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.