நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவரின் அந்தரங்க உறுப்பில் கற்களை கட்டி சித்ரவதை!

 
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவரின் அந்தரங்க உறுப்பில் கற்களை கட்டி சித்ரவதை!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவரை, ஒரு கும்பல் இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரை-படம்
ஆன்லைன் பந்தய விளையாட்டில் தோல்வியடைந்ததற்கு ரூ.20,000 தர மறுத்ததால், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு மாணவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அம்மாணவனை நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பில் கனமான செங்கற்களை கட்டி தொங்கவிட்டும், ஃபயர் ஸ்ப்ரே மூலம் முகத்தை எரிக்க முயற்சித்தும், அடித்தும், உதைத்தும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொடுமை செய்துள்ளனர்.


20000 ரூபாய் கடன் வாங்கி அதை ஆன்லைன் விளையாட்டில் தோற்று போயுள்ளார் மாணவர், கடன் கொடுத்த மாணவர்கள் வட்டியுடன் 50000 ரூபாய் கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தார் கொடுத்த புகாரில் தனய், அபிஷேக் வர்மா, யோகேஷ் விஸ்வகர்மா, சஞ்சீவ் யாதவ், ஹர்கோவிந்த் திவாரி, ஷிவா திரிபாதி  உள்ளிட்ட 6 பேரை போலீசாரை கைது செய்துள்ளனர்.