ஒரேநாளில் 10,488 பேருக்கு கொரோனா : 313 பேர் உயிரிழப்பு!!

 
CORONA

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்   10,488   பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 10,302  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும்  தொற்று பாதிப்பு சற்று கூடியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,45,10,413 ஆக உள்ளது.  

corona

அத்துடன் ஒரேநாளில் 313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று 267  பேர் பலியான நிலையில் இன்று மீண்டும் கொரோனா உயிரிழப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,65,662   ஆக உள்ளது. 

corona

அத்துடன் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,22,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12,329 ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,22,037 ஆக உயர்ந்துள்ளது.   அதேபோல் இதுவரை இந்தியாவில் 1,16,50,55,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.