நான் நலமுடன் இருக்கிறேன்! மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்

 
வெள்ளத்தில் மூழ்கிய ஒடிஷா… நீட் தேர்வை ஒத்திவைக்க பிரதமரிடம் போனில் பேசிய நவீன் பட்நாயக்

ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சதி இருக்கலாம். கடந்த ஓராண்டாக நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. 

Odisha CM calls on PM | Prime Minister of India

நவீன் பட்நாயக்கிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு அவரது நலன் விரும்பிகளை கவலைப்பட வைத்துள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும், விசாரித்து உண்மையை கூறுவோம்” என்றார்.

பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “நான் நலமுடன் இருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டுவருகிறேன். எனது உடல்நிலை மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் பிரதமர் மோடி எனக்கு தான் போன் செய்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.