சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாட்டம்!!

 
vivek

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியான இன்று  தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

tn

 விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி கோல்கத்தாவில் பிறந்தார்.  சுவாமி விவேகானந்தர் சிறு வயதிலேயே இந்து சமயக் கொள்கைகளில் அதிக ஈடுபாடும்,  பகுத்தறிவும்  பெற்ற சிந்தனைவாதியாகவும் ,தத்துவமும், புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராகவும் காணப்பட்டார். அவரது வாழ்க்கை முறையும், வார்த்தைகளும் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது. நமது நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் இளைஞர்கள் முன்னேற்றம் நமது நாட்டின் முன்னேற்றம் என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர். இதனால்  1984ஆம் ஆண்டு மத்திய அரசு  விவேகானந்தரின் பிறந்தநாளினை தேசிய நாளாக அறிவித்தது . இதைத்தொடர்ந்து 1985ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இத்தினம் இளைஞர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

t
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தில், நாட்டின் எதிர்காலமாகிய இளைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சரியான திட்டமிடலும், விடாமுயற்சியும் இருந்தால், எவ்வித சூழ்நிலையிலும் சாதனை என்பது, எட்டக்கூடிய இலக்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் , "விழிப்போடு இரு, நிமிர்ந்து நட, கருதிய காரணம் கைகூடும் வரை உறுதியோடு போராடு என்ற சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம், தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.