பாதுகாப்பு படையினருக்கு பிறகு எங்கள் கட்சி அதிகபட்ச தியாகங்களை செய்துள்ளது.. ஒமர் அப்துல்லா

 
ஒமர் அப்துல்லா

ஜம்மு அண்ட் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பிறகு எங்கள் கட்சி அதிகபட்ச தியாகங்களை செய்துள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு அண்ட் காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீர் மக்களை தவறாக வழிநடத்தியவர்களே 50 ஆயிரம் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்து இருந்தார். துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஒமர் அப்துல்லாவிடம் கேட்டனர். அதற்கு ஒமர் அப்துல்லா பதிலளிக்கையில் கூறியதாவது: நாங்களும் இங்குதான் வசிக்கிறோம். ஜம்மு அண்ட் காஷ்மீர் மக்களை தவறாக வழிநடத்தியவா்கள் தான் துப்பாக்கி கொண்டு வந்த உண்மையான குற்றவாளிகள். 

மனோஜ் சின்ஹா

நீங்கள் நிற்கும் இடத்தில் தேசிய மாநாட்டு கட்சி அலுவலகம் உள்ளது. பாதுகாப்பு படையினருக்கு பிறகு எங்கள் கட்சி அதிகபட்ச தியாகங்களை செய்துள்ளது. எங்கள் அலுவலகம் முழுவதும் கையெறி குண்டு தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்கள் மற்றும் தோட்டாக்களால் பலியானவர்களின் புகைப்படங்கள் உள்ளன. கொலைகளின் தாக்கம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள், நீங்கள் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த குடும்ப உறுப்பினர்களை கேட்க வேண்டும். துணைநிலை கவர்னர் இன்று வருவார், நாளை செல்வார். மக்கள் துப்பாக்கியை கையில் எடுப்பது காஷ்மீர் நலனுக்காக இல்லை என்று தேசிய மாநாட்டு கட்சி முதல் நாளிலிருந்தே கூறி வருகிறது. 

காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் குடும்பத்தில்  துப்பாக்கியால் என்ன தாக்கம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று நாங்கள் முதல் நாளே கூறி வருகிறோம். பொய்யான கனவுகளை வழங்குவதாக கூறி மக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. அந்த கனவுகள் ஒரு போதும் நிறைவேறவில்லை, ஆனால் இங்கே கல்லறைகள் நிறைந்துள்ளன. எங்கள் நதிகள் ரத்த வெள்ளத்தில் மூழ்கின. முதல் நாளில் இருந்து நாங்கள் எழுப்பாத ஒன்றை துணைநிலை கவர்னர் கூறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.