தேசிய ராணுவ தினம் : தேசப் பாதுகாப்பில் ராணுவத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என மோடி புகழாரம்!!

 
ttn

சுதந்திர இந்தியாவின் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். அவரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய ராணுவ தளபதியாக பதவியை ஏற்றார். இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய  ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

tn

அந்த வகையில் தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் தலைமை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.  ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த், விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

tn

அத்துடன்  ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ராணுவ தினத்தை முன்னிட்டு, நமது துணிச்சலான, மரியாதைக்குரிய ராணுவ வீரர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.  தேசப் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வார்த்தைகளால்விவரிக்க முடியாது. ராணுவ வீரர்கள் மோசமான நிலப்பரப்புகளில் போராடி வருகிறார்கள். இயற்கை பேரிடர் உள்ளிட்ட நெருக்கடிகளில் மக்களுக்கு உதவுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.