முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி!

 
tnttt

டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.

modi

இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. விவசாயிகளுக்கான நிதி வழங்கும், PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ₹20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டார்.

modi

3ஆவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கிஷான் சம்மன் நிதி உதவி திட்டத்திற்கான 17ஆவது தவணைத்தொகைக்கு முதல் கையெழுத்திட்டார்.