72 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் சந்திரபாபு மகன் அமோக வெற்றி

 
72 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் சந்திரபாபு மகன் அமோக வெற்றி

91,413 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

Nara Lokesh - Wikipedia

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதியின் 72 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் வெற்றி பெற்றுள்ளார். 1952ல் மங்களகிரி தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் இருந்து தற்போது வரை அதாவது 2024 வரை நாரா லோகேஷ் முதல்முறையாக  அதிகபட்சமாக 91,413 வாக்குகள்  பெற்றுள்ளார்.   நாடு சுதந்திரம் அடைந்து, அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, 1952ல் முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டி.லக்ஷ்மய்யா, அப்போது சென்னை மாகாணத்தில் இருந்த மங்களகிரி தொகுதியில் 17,265 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  

மங்களகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு இதுவரை கிடைத்துள்ள அதிக பெரும்பான்மை வாக்கு பதிவு இதுவாகும்.  2024 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட நாரா லோகேஷ் மொத்தம் 1,67,710 வாக்குகளைப் பெற்று, 91,413 வாக்குகள் பெரும்பான்மையுடன் தனது போட்டியாளரான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் முருகுடு லாவண்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.