மத்திய கப்பல் போக்குவரத்துத்துறையின் பெயர் மாற்றம்!
Nov 8, 2020, 15:59 IST1604831357000
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறையின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறையின் பெயர் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நீர்வழி கப்பல் போக்குவரத்து சேவையை குஜராத் மாநிலத்தில் இன்று ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது நாட்டு மக்களிடம் பேசிய மோடி, நீர்வழி போக்குவரத்து சேவை மூலம் பொருட்களை எடுத்து செல்வதற்கான செலவை வெகுவாக குறைக்க முடியும் . சரக்குகளின் தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு உகந்த சுற்று சூழலை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.