தந்தையாக முடியாது என்பதால் தான் ராகுல் காந்தி திருமணம் செய்யவில்லை.. கர்நாடக பா.ஜ.க. தலைவர் பேச்சு

 
ராகுல் காந்தி

குழந்தை பெற்றுக் கொள்ள (தந்தையாக) முடியாது என்பதால் தான் ராகுல்  காந்தி திருமணம் செய்யவில்லை என்று கர்நாடக பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கட்டீல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக பா.ஜ.க. தலைவரும், மக்களவை எம்.பி.யுமான நளின் குமார் கட்டீல் அதிரடி கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். அவரது கருத்துக்கள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவது வாடிக்கை. தற்போது ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்க முடியாததால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நளின் குமார் கட்டீஸ் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நளின் குமார் கட்டீல்

அந்த வீடியோவில் நளின் குமார் கட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான சித்தராமையாவும், ராகுல் காந்தியும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால் கோவிட்-19 தடுப்பூசி போட வேண்டாம் என்று கூறினர்.  ஆனால் அவர்கள் தடுப்பூசி போட்டார்கள். இதற்கு முந்தைய நாள் எங்களது சட்டமேலவை உறுப்பினர் மஞ்சுநாத்,  குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால் தான் ராகுல்  காந்தி திருமணம் செய்யவில்லை என்று கூறினார் என்று அவர் பேசினார் என்று அதில் தெரிவித்துள்ளார்.

பிரியங் கார்கே

நளின் குமார் கட்டீலின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அந்த கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவருமான பிரியங் கார்கே டிவிட்டரில், நளின் கட்டீலின் அறிக்கைகளை பார்க்கும்போது,அவருக்கு உண்மையிலேயே தீவிரமான மனநிலை பிரச்சினைகள் இருப்பது போல் தெரிகிறது. அவருடைய அறிவுத்திறன் குறைந்த நோய் அவரது முழுக் கட்சிக்கும் பரவுகிறது. விரைவில் குணமடையுங்கள் பா.ஜ.க. என பதிவு செய்துள்ளார்.