சுரேகா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நாகார்ஜுனா

 
ட் ட்

தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீது  நடிகர்  நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samantha-Naga Chaitanya Divorce


நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும்  காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில்,  நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவும் - நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். கே.டி.ராமராவ், நடிகை சமந்தா மீது விருப்பம் கொண்டு கேட்டதாகவும், அதற்கு நாகார்ஜுனாவும் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதனாலேயே  அவர் நாக சைதன்யா  அக்கினேனியை விவாகரத்து செய்தார் என்றும் பேசியிருக்கிறார்.  அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த பேட்டி வைரலான நிலையில், தெலங்கு திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Minister Konda Surekha

இதற்கு நடிகர் நாகார்ஜுனா, சமந்தா, அமலா, நாக சைதன்யா, நடிகர்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீது  நடிகர்  நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கவுரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.