நாகாலாந்து தேர்தலில் டிவிட்டர் புகழ் பா.ஜ.க.வின் டெம்ஜென் இம்னா அலோங் வெற்றி..

 
டெம்ஜென் இம்னா அலோங்

நாகாலாந்து தேர்தலில் அலோங்டாகி தொகுதியில் போட்டியிட்ட டிவிட்டர் புகழ் பா.ஜ.க.வின் டெம்ஜென் இம்னா அலோங் வெற்றி பெற்றார்.

நாகாலாந்தில் உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருப்பவர் பா.ஜ.க.வின் டெம்ஜென் இம்னா அலோங். இவர் பிரபலமான அரசியல்வாதியும் மட்டுமல்ல மிகவும் நகைச்சுவையான மனிதரும் கூட. டெம்ஜென் இம்னா அலோங் டிவிட்டரில் போடும் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் வைரலாகும். டிவிட்டரில் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரதமர் மோடியே இவரை பாராட்டி பேசியுள்ளார். நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் அலோங்டாகி தொகுதியில் டெம்ஜென் இம்னா அலோங் போட்டியிட்டார்.

பா.ஜ.க.

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எதிர்பார்த்தது போலவே அம்மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. அலோங்டாகி தொகுதியில் டெம்ஜென் இம்னா டோங்  வெற்றி பெற்றார். டெம்ஜென் இம்னாடோங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை லானு லாங்சாரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மோடி

நாகாலாந்து மாநிலம் திமாபூரில் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் ஒன்றில் பேசுகையில், எங்கள் மாநில பா.ஜ.க. தலைவர் டெம்ஜென் இம்னா கூறுவது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அவர்கள் அதை முழுமையாக அனுபவிக்கிறார்கள். எங்கள் கட்சியின் நாகாலாந்து தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் மற்றும் அவரது கருத்துக்கள் உண்மையான வடகிழக்கை உலகுக்கு பிரதிபலிக்கின்றன. அவர் நாகாலாந்து மற்றும் முழு வடகிழக்கு பகுதியையும் டிஜிட்டல் தளத்தில் அழகாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நானும் எப்போழுதும் அவருடைய எல்லா பதிவுகளையும் பார்க்க முயற்சிக்கிறேன் என தெரிவித்தார்.