புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தெலங்கு தேசம் கட்சி பங்கேற்கும்.. சந்திரபாபு நாயுடு உறுதி

 
சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எங்கள் கட்சி பங்கேற்கும் என்று தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர்  மே 28ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளனர். இந்நிலையில் தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (யு.பி.டி.), திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்தன. 

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

அதேசமயம், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக அறிவித்தன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது.

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எங்கள் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்தார்.  மேலும், சந்திரபாபு நாயுடு கூறுகையில், நம்மிடம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இருப்பதால், பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் இந்த வரலாற்று கட்டமைப்பைக் கட்டியெழுப்பப் பங்களித்த ஒவ்வொரு கரங்களையும் வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியான மற்றும் பெருமைமிக்க தேசத்துடன் இணைகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருமாற்ற கொள்கை மற்றும் முடிவெடுப்பதற்கான உறைவிடமாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.