“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை”- அதிரடி வாக்குறுதி
பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் சிறப்பு வேலைவாய்ப்பு சட்டத்தை இயற்றுவேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஆட்சிக்கு வந்தபின் 20 நாட்களிலேயே வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 20 மாதங்களுக்குள், குடும்பத்தில் ஒருவர் அரசு ஊழியராக இருப்பார் என்றும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
துணை முதல்வராக தனது 17 மாத பதவிக்காலத்தில், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்ததாகவும், மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அடித்தளத்தை தயார் செய்ததாகவும் அவர் கூறினார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நான் அரசு வேலைகளை உறுதியளித்திருந்தேன். நான் ஆட்சியில் இருந்த குறுகிய காலத்தில், ஐந்து லட்சம் வேலைகள் வழங்கப்பட்டன என்றும் ஜேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.


