ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து... ஆனாலும் தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ

 
'

மும்பையில் ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து இருந்தாலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பராக் ஷா தெருவில் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ரூ. 5,000 கோடி நிகர மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஏன் ஒரு நாள் 'பிச்சைக்காரராக' ஆனார்?

மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பராக் ஷா. இவரது சொத்து மதிப்பு ரூ. 5,000 கோடி. பணத்தால் வாங்கக்கூடிய அத்தனை பொருள் வசதிகள் இருந்தபோதிலும்,  பிச்சைக்காரர் வேடமிட்டு, தெருக்களில் பிச்சை எடுத்தார். கடுங்குளிரையும், உடல் உழைப்பையும், வழிப்போக்கர்களின் ஏளனங்களையும் சகித்துக்கொண்டு அவர் பிச்சை எடுத்தார். பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா, தனது ஆன்மீக குருவின் கட்டளையை ஏற்று, சொகுசு answe கார்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், விலை உயர்ந்த ஆடைகள் என அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் துறந்து பிச்சைக்காரராக மாறிய செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிச்சைக்காரனாக வேடமிட்டது என் குருவின் கட்டளை, அதனால் நான் ஒரு நாள் காட்கோபர் முழுவதும் பிச்சைக்காரன் வேடத்தில் சுற்றித் திரிந்தேன். என் குரு சொன்னதெல்லாம் என் நன்மைக்காகத்தான் என பராக் ஷா கூறினார். பணம், புகழ் மற்றும் அதிகாரம் ஆகியவை ஒரு மனிதனுக்குள் அகங்காரத்தைத் தூண்டுகின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த அனுபவம் குறித்து பராக் ஷா கூறுகையில், “நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார். மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் என்னை வற்புறுத்துவார். ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். இச்சம்பவம் ஒரு அதிர்ச்சியூட்டும் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்” என்றார்.