ராட்சத பேனர் விபத்து - உயிரிழப்பு 14 ஆக உயர்வு

 
tn

மும்பையில் நேற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீசியது . இதனால் மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புயலுடன் சேர்ந்து மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும்,  தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டது. 

tt

மும்பை நகரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மும்பையின் வடாலம் பகுதியில் புழுதி புயல் வீசியதன் காரணமாக ராட்சத இரும்பு பேனர்  ஒன்று பெட்ரோல் பங்க் மீது  விழுந்தது இந்த விபத்தில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

tn

இந்நிலையில் மும்பையில் புழுதிப் புயலின்போது ராட்சத இரும்பு விளம்பரப் பலகை சரிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.  மீட்பு பணிகளில் NDRF குழுவினர் தீவிரமடைந்துள்ளனர்.  74 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.