மும்பை தாக்குதலின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்..

 
mumbai attack

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை மக்கள், அன்று நிகழவிருந்த கோர சம்பவத்தை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.  பாகிஸ்தானிலிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 10 தீவிரவாதிகள்,  மீனவர்களை கொன்று விட்டு அவர்களின் படகுகள் மூலம் மும்பை நகருக்குள் நுழைந்தனர். பல்வேறு குழுக்களாக பிரிந்த அவர்கள், அன்று மாலை மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தாக்குதல் நடத்தினர். 

அப்போது ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் சிதறி ஓடினர்.தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 58 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.அதேபோல், பிரபல தாஜ் ஓஹோட்டல் ,நாரிமன் ஹவுஸ்,  ஓபராய் ட்ரிடண்ட் ஹோட்டல் , காமா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

1

வெளிநாட்டினர் உட்பட 300க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர். இவர்களை மீட்க 3 நாட்களாக பாதுகாப்பு படையினர் போராடினர். தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற இந்த தாக்குதலில், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஹேமந்த் கர்ரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், முன்பை கூடுதல் காவல் ஆணையர் அஷோக் காம்தே உள்ளிட்டோர் வீரமரணம் அடைந்தனர்.  இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தக்குதலின்போது அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அஜ்மல் கசாப்பிற்கு நீதிமன்ற உத்தரவின்படி 2012, நவ. 21 ஆம் தேதி  தூக்கி தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ,  தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.