வீட்டு மாப்பிள்ளைக்கு 225 விதமான உணவுகளுடன் விருந்து வைத்த மாமியார்

 
andhra

ஆந்திராவில் சங்கராந்தி விருந்துக்கு வந்த மாப்பிள்ளைக்கு 225 விதமான உணவுகளுடன் விருந்து வைத்த மாமியார் வீட்டாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

కొత్తల్లుడికి 225 వంటకాలు | 225 items

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் என்றாலே விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. இந்நிலையில் ஏலூர் மாவட்டம், கொய்யாலகுடம் மண்டலம் ராஜவரம் கிராமத்தைச் சேர்ந்த காக்கி நாகேஸ்வர ராவ் -  லட்சுமி தம்பதியின் மகள் ஜோத்ஸ்னாவை, விஜயவாடாவைச் சேர்ந்த லோகேஷ் சாய் என்பவருக்கு, பத்து மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார். லோகேஷ் சாய் பெங்களூரில் வியாபாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில் சங்கராந்தி பண்டிகையையொட்டி அத்தை, மாமா அழைப்பின் பேரில் லோகேஷ் சாய் தனது மனைவியுடன் ராஜவரம் வந்தார்.மாமியார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு காக்கி நாகேஸ்வர ராவ் தம்பதிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மருமகன் வாழ்நாளில் மறக்க முடியாத  வகையில் 225 வகையான உணவுகளுடன்  உணவு பரிமாறப்பட்டது. மருமகன் லோகேஷ் சாய் 225 வகையான உணவுகளை கண்டு வியப்பில் ஆழ்ந்தார். லோகேஷ் சாயின் தாயார் தீப்தி, தனது மகனுக்கு அவரது அத்தை  மாமா வழங்கிய  உணவைப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்இது கோதாவரி மாவட்டங்களின் அன்பு, பாரம்பரியம் மற்றும் மரியாதைக்கு சான்றாகும் என அவர்கள் தெரிவித்தனர்.