காதலனுக்காக 3 வயது குழந்தையை கொலை செய்த தாய்
காதலனுக்காக 3 வயது குழந்தையை கொலை செய்த கொடூர தாய் கைத் செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் சிவம்பேட்டை மண்டலம் சப்ஷாபள்ளி கிராமத்தை சேர்ந்த பந்து மம்தா, ராய்போல் மண்டலத்தைச் சேர்ந்த வட்டேப்பள்ளி பாஸ்கரை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண் (4) மற்றும் தனுஸ்ரீ (3) என்ற குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் பாஸ்கருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்த மம்தா கணவருடன் வாழ முடியாது என்றும், பெரியவர்கள் தனது விருப்பத்திற்கு மாறாக தனக்கு திருமணம் செய்ததாக கூறி, மம்தா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது மாமியார் வீட்டை விட்டு சப்ஷாபள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். சில மாதத்திற்கு பிறகு, அதே கிராமத்தைச் சேர்ந்த ஃபயாஸுடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. அவருடன் செல்ல முடிவு செய்த மம்தா கடந்த சில மாதம் முன்பு மகனை தனது பெற்றோர் விட்டுச் சென்றார். தனுஸ்ரீயை தன்னுடன் அழைத்துக்கொண்டு, தனது காதலன் ஃபயாஸுடன் தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறினார்.
இருப்பினும், கிராமத்தின் புறநகரில், மம்தாவும் ஃபயாஸும் தனுஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்று, ஒரு குழி தோண்டி புதைத்தனர். இந்தநிலையில் அவர்கள் இருக்கும் இடம் தெரியாததால் அவரது கணவர் பாஸ்கர் கடந்த மாதம் 27ம் தேதி அன்று சிவம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இதில் மம்தாவும் ஃபயாஸும் ஆந்திராவின் குண்டூரில் இருப்பதைக் கண்டுபிடித்து, அங்கு சென்று அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையின் போது, தனுஸ்ரீயைக் கொன்றதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். தங்கள் மகளைக் கொன்று புதைத்த இடத்தைக் காட்டியதை அடுத்து போலீசார் உடலை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.

