NEET UG 2022 - இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்..

 
நீட் தேர்வு

இளங்கலை நீட்  தேர்வுக்கு  இதுவரை 11 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட்

இந்தியாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு  ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு  கடந்த ( எப்ரல் ) 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி  இளங்கலை  நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.  

நீட் விலக்கு - தமிழக அரசு

வருகிற மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதால், விண்ணப்பிப்பவர்களின்  எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என  கூறப்படுகிறது.  இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இருப்பினும் தமிழகத்தில்  இருந்து இதுவரை 84 ஆயிரத்து  214 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.