மது குடித்து மட்டையான குரங்கு

 
மது குடித்து மட்டையான குரங்கு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மதுக்கடைக்குள் புகுந்த கர்ப்பிணி பெண் குரங்கு மது பாட்டிலை பற்களால் திறந்து குடித்துவிட்டு பெட்டிகளின் மீது போதையில் படுத்துக்கிடந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மதுபான கடைக்குள் சரக்கடித்து மட்டையான குரங்கு: வைரல் வீடியோ/ Monkey Enters  Ranchi Liquor Shop Downs Half A Bottle Passes Out On Cartons

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஊழியர்கள் மதுக்கடைக்குள் இருந்தபோது, ​​குரங்கு ஒன்று திடீரென உள்ளே புகுந்தது. முதலில், ஊழியர்கள் அதை விரட்ட முயன்றனர். பின்னர் அதன் கவனத்தைத் திசை திருப்ப பிஸ்கட்டுகளையும் கொடுத்தனர். ஆனால், அந்தக் குரங்கு ஒரு ஓட்கா பாட்டிலை எடுத்து, அதை உடைத்து, அதிலுள்ள மதுவைக் குடித்துவிட்டது. 

குடித்த சிறிது நேரத்திலேயே, அது கடைக்குள் இருந்த மது அட்டைப்பெட்டியின் மீது தூக்கக் கலக்கத்துடன் படுத்து உறங்கிவிட்டதாக ஊழியர்கள் கூறுகின்றனர். குரங்கின் இந்தச் சேட்டைகளைக் கண்டு அங்கிருந்தவர்கள் திகைத்துப்போனார்கள். மது அருந்திய பிறகு, அது கடைக்குள் நீண்ட நேரம் சுயநினைவின்றி இருந்தது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இந்த முழு நிகழ்வையும் தங்கள் கைபேசிகளில் படம்பிடித்தனர். குரங்கை விரட்ட முயன்ற கடை ஊழியர் ஒருவரை கடித்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதி. தகவலறிந்து வந்த வனத்துறை மீட்புக் குழுவினர் குரங்கை பத்திரமாக மீட்டுச் சென்றனர்.