கல்வியும், சுகாதாரமும் முன்பு வியாபாரமாக பார்க்கப்படவில்லை, இப்போது வியாபாரம் போல் நடந்து வருகிறது... மோகன் பகவத்

 
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்…

கல்வியும் சுகாதாரமும் முன்பு வியாபாரமாக பார்க்கப்படவில்லை, இப்போது அவை வியாபாரம் போல் நடந்து வருகிறது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆத்ம மனோகர் ஜெயின் கோவிலின் கர்னால் வளாகத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசுகையில் கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன், நம் நாட்டில் 70 சதவீத மக்கள் படித்தவாகள், வேலையில்லா திண்டாட்டம் இல்லை. அதேசமயம் அப்போது இங்கிலாந்தில் 17 சதவீதம் பேர் மட்டுமே படித்தவர்கள். 

கல்வி

ஆங்கிலேயர் ஆட்சி காலததில் நம் நாட்டில் அவர்களின் மற்றும் நமது கல்வி மாதிரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக இங்கிலாந்தில் 70 சதவீதம் மக்கள் கல்வியை பெற்றனர், ஒப்பிடும்போது இந்தியாவில் 17 சதவீதம் பேர் மட்டுமே கல்வி பெற்றனர். ஆங்கிலேயர் ஆக்கிரமிப்புக்கு முன்னர் இந்தியாவில் சாதி மற்றும் நிறப் பாகுபாடு இல்லை. ஏனெனில் கல்வி முறை தனிமனி சுதந்திரத்தை வளர்ப்பதற்கு ஏற்றதாக இருந்தது. 

சுகாதாரம்

கல்விக்காகவும், சுகாதாரத்திற்காகவும் அனைவரும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இவை இரண்டும் மிகவும் விலை உயர்ந்ததாக, அரிதாகி விட்டது. கல்வி மற்றும் சுகாதார துறைகள் இப்போது இந்தியாவில் நிறுவனங்களாக மாறி விட்டன. இன்று இவை இரண்டும் ஒரு வியாபாரம் போல் நடந்து வருகிறது. கல்வியும் சுகாதாரமும் ஒவ்வொரு மனிதனுக்கும் சென்றடைய வேண்டியது அவசியம். முன்பு இவை (கல்வி மற்றும் சுகாதாரம்) வியாபாரமாக பார்க்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.