பீகார் தேர்தல் முடிவு - நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி: மோடி
பீகார் தேர்தல் முடிவு நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
![]()
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் பேராதரவோடு நான்கில் மூன்று மடங்கு இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது. பீகார் தேர்தலில் 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களான முதலமைச்சர் நிதிஷ்குமார், சிராக் பஸ்வான், ஜித்தன் ராம் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “பீகார் தேர்தல் முடிவு நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சிறப்பான செயல்பாடுகளுக்கு மக்கள் கொடுத்துள்ள பரிசு. முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


