நிலவில் மனிதனை அனுப்பவதுதான் அடுத்தக்கட்ட திட்டம்: பிரதமர் மோடி

 
modi

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில் புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Image

சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. நிலவில் இந்தியா கால் பதித்திருப்பதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை காணொளி வாயிலாக சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடைய வைத்துள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டிலும் பெருமிதம் பொங்குகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா வரலாறு படைத்ததாகவும்,  இந்தியாவின் வருங்கால வளர்ச்சியினுதயமாக இச்சாதனை திகழ்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். நிலவின் தென்பகுதியை தொட்டு இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Image

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைத்த வெற்றி. நிலவில் மனிதனை அனுப்பவதுதான் அடுத்தக்கட்ட திட்டம். இஸ்ரோ மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் விரைவில் அனுப்பபடும் என்றார்.