ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் மோடி

 
மோடி

ஜூன் 9 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு 3ஆவது முறை  நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார் என குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

மோடி

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இருப்பினும்  தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.


இதையடுத்து ஆட்சியமைக்க பிரதமர் நரேந்திர மோடி உரிமைகோரிய நிலையில், பிரதமராக நியமிக்கும் ஆணையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மோடியிடம் வழங்கினார். இதன்மூலம் ஜூன் 9 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு 3ஆவது முறை  நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார் என குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.