இனி #GoBackModi இல்ல.. #ModiWentBack! நல்ல வேலை உயிருடன் திரும்பிட்டேன் - பிரதமர் மோடி!!

 
modi

மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியை  பிரதமர் மோடி ரத்து செய்தார்.

Image

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டறியப்பட்டதாகவும், மழை மற்றும் மிகவும் மங்கலான நிலை காரணமாகவும் மோடியின் வாகனம் மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் காத்துக்கிடந்ததாக சொல்லப்பட்டது. மேலும் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்ததாகவும் சலசலப்பு எழுந்தது. காத்திருப்புக்கு பின் பிரதமர் மோடி, பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பி சென்றார்.

பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின்படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் என அனைத்துமே தயார் நிலையில் இருந்தன. எனவே இந்தப் பாதுகாப்பு குறைப்பாட்டில் எந்த குறைபாடும் இல்லை என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பிரதமரின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் பாதுகாப்பு குறைபாடு எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது., உண்மை என்னவென்றால் பாஜக ஏற்பாடு செய்த கூட்டம் ஃபிளாப்பானது. அதை தெரிந்துகொண்ட மோடி, அப்படியே திரும்பிவிட்டார் என பஞ்சாப் அமைச்சர் ராஜ்குமார் வெர்கா தெரிவித்துள்ளார். 

இதனிடையே பஞ்சாப் விமானம் நிலையம் சென்ற பிரதமர் மோடி,  “நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன். உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள்” என அங்கிருந்த அதிகாரிகளிடம் பிரதமர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.