'அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்' - பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி

உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். 

மோடி

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது. சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பொறுப்பற்ற நிதி கொள்கைகள், பொருளாதார மட்டுமின்றி சமூகத்தையும் சிதைக்கிறது. இதனால் ஏழைகள் அதிக விலை கொடுக்கிறார்கள்- பிரதமர் மோடி

மாநில தேர்தல்களில் இலவச கலாச்சாரத்தை காங்கிரஸ் ஊக்கப்படுத்துகிறது. இலவச கலாச்சாரம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்த  முயற்சிக்கிறது. தேர்தல்களில் நடைமுறைக்கு ஒத்து வராத வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்கிறது. காங்கிரஸின் உத்தரவாதங்கள், நாட்டை திவால் ஆக்கவும் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் வகையிலும் உள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது எங்கள் வாக்குறுதிக்காக மக்கள் எங்களை தேர்வு செய்தார்கள். ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி அதைவிட பிரமாண்டமாக இருந்தது. 2024 தேர்தலிலும் சந்தேகமே வேண்டாம். மீண்டும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும்” என தெரிவித்தார்.