#Breaking பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி
Jun 5, 2024, 14:07 IST1717576628228
17-வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி .
இந்நிலையில் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார் . புதிய அமைச்சரவை பதவியேற்கும் வகையில் பதவியில் இருந்து விலகினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.