140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும்- மோடி

 
மோடி

நாட்டுக்கு சேவை செய்யவும் 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

19-வது மக்களவையின் புதிய கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “இந்திய ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். லோக்சபாவின் புதிய எம்பிக்களை வரவேற்கிறேன். சுதந்திரத்துக்கு பிறகு முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை எம்பிக்கள் பதவியேற்பு விழா நடக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எம்பிக்களை வரவேற்கிறேன். நாட்டுக்கு சேவை செய்யவும் 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும். புதிய உத்வேகத்துடன் பணிகளை தொடங்க வேண்டிய கடமை நம் முன் உள்ளது. 

நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம், எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3-வது முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். நாடாளுமன்றக் கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். அனைத்துத் திட்டங்களுக்கும் 3 மடங்கு  முக்கியத்துவம் வழங்கப்படும்” என்றார்.