எதிர்க்கட்சிகளை பார்த்து பயந்து போனாரா பிரதமர் மோடி?

 
m m

மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Lok Sabha, Rajya Sabha: After Rahul Gandhi's Speech, PM Modi To Address  Parliament Today

மக்களவையில் இன்று மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பேச இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீன விவகாரத்திலும் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்திலும் விவாதம் கேட்டு தொடர் கோரிக்கைகளை முன்வைத்து மக்களவையில் முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில், அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று பேச இருந்த பிரதமர் நரேந்திர மோடி இதனால் பேசவில்லை, அவர் அவைக்கும் வரவில்லை. தேச பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராகுல்காந்தி சரமாரி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மாலை 5 மணிக்கு பிரதமர் பதிலளிப்பார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் இன்று பதிலளிக்கவில்லை