மோடி பதவியேற்பு விழா- அம்பானி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு

 
malliga

இன்னும் சில நிமிடங்களில் 3வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள பல்வேறு நாட்டின் தலைவர்கள், பாஜக மற்றும அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் என பலர் டெல்லியில் குவிந்துள்ளனர். 

Image


பிரதமராக 3வது முறையாக பதவியேற்கும் மோடி விழாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றுள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான NDA கூட்டணி அரசு பதவியேற்பு விழாவில் கங்கனா ரனாவத், எல்.முருகன்,  நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டுள்ளனர். மேலும் விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களான பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Image

எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டுள்ளார். மேலும் மோடி பதவியேற்பு விழாவில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்  அவரது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்