3 முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட மோடி!

 
மோடி

மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகியவற்றை பிரதமர் மோடி மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார். முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார்.


இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா பொறுப்புகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுடன் அணுசக்தி துறை, விண்வெளித் துறை. அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார்.