டிவிட்டரில் ’மோடியின் குடும்பம்’ என பதிவிட்டதை நீக்க பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்

 
மோடி

எக்ஸ் தளத்தில் மோடியின் குடும்பம் என பதிவிட்டதை நீக்க பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி! - NARENDRA MODI  SWORN IN AS PRIME MINISTER

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர். 



நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் உங்கள் சமூக ஊடக சொத்துக்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பந்தம் வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.