#KarnatakaElectionResults மஜத தலைவர் குமாரசாமி, சித்தராமையா முன்னிலை

 
kumarasamy

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Karnatakaகடந்த 10ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 224 தொகுதிகளுக்காக 34 மாவட்டங்களில் 36 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு கர்நாடகாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 ,மதசார்பற்ற ஜனதா தளம் 207,  ஆம் ஆத்மி 217 ,பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களம் இறங்கின. அத்துடன் 918 சுயேட்சைகள் உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டனர். அந்த வகையில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் சுமூகமான நிலையில் நடைபெற்ற நிலையில் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வந்தன.

tn

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி உள்ள நிலையில்,வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தபால் வாக்குகளை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

Kumarasamy

  • சன்னபட்னா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஸ்வரா முன்னிலை வகித்த நிலையில்  குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் மீண்டும் முன்னிலையில் உள்ளார். 
  •  அதேபோல் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார் . காந்திநகர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் உள்ளார்.

  •  பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் தார்வாட்  தொகுதியில் முன்னிலை பெற்று, தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்  
  • அத்துடன் தபால் வாக்கு எண்ணிக்கையில் மல்லேஸ்வரம் ,கே ஆர் புரம் தொகுதி, சி.வி. ராமன் தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது.  சர்வஜன நகர் , புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியும்,  மகாலட்சுமி நகரில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது. ஷிகவான் தொகுதியில் கர்நாடக முதல்வர் பொம்மை முன்னிலையில் வைத்து வருகிறார்