செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஊர்வலமாக கொண்டு சென்ற ரோஜா

 
ரோஜா

மகாபலிபுரத்தில் நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா ஊர்வலமாக  கொண்டு சென்றார் 

 తాజాగా ఈరోజు తిరుపతి మహతి ఆడిటోరియంలో 44వ చెస్ ఒలింపియాడ్ టార్చ్ రిలే లాంచింగ్ కార్యక్రమంలో పాల్గొన్నఆమె.. ఆ టార్చ్ ను లిఫ్ట్ చేసి.. క్రీడాకారులను ప్రోత్సహించారు.

44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.  இதனையொட்டி  டெல்லியில் ஜூன் 19 அன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நம் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாது ஆந்திராவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலமாக திருப்பதிக்கு வந்தடைந்தது. 

திருப்பதி சீனிவாசா விளையாட்டு வளாகத்தில் இருந்து ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா, செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகாஷ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் திருப்பதியில் எம்எல்ஏ கருணாகர்,  திருப்பதி கலெக்டர் வெங்கடரமணா ஆகியோர் செஸ் ஒலிபியாட் ஜோதியுடன் பேரணியாக 
மகதி அரங்கம் ஊர்வலமாக வந்தனர். இதில் என்சிசி  மாணவ மாணவிகள், பரதநாட்டியம் கல்லூரியின் மாணவர்களின் நடனம் ஸ்கேட்டிங் சங்கத்தின் சார்பில் ஸ்கேட்டிங் செய்தபடி  மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

பின்னர் மகதி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரோஜா  செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில்  மகாபலிபுரத்தில் வரும் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று திருப்பதி நகருக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆந்திர மாநில வீரர்கள் செஸ் போட்டியில் தங்கள் பலத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆந்திர  மாநில செஸ் வீரர்களை ஊக்குவிக்க ஆந்திர அரசு எப்போதும் முன்னோடியாக உள்ளது என்றார். மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். நமது நாட்டைச் சேர்ந்த வீரர்கள், குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சிறந்து விளங்க வேண்டும் என்று அவர்  வாழ்த்தினார்.