பகவான் கிருஷ்ணர் போல் யோகி ஜி தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்.. நிதின் கட்கரி பாராட்டு

 
வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை பாராட்டும் விதமாக, பகவான் கிருஷ்ணரை போல் யோகி ஜி தீயசக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் கோரக்பூரில் மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை  துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 18 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  பேசுகையில் கூறியதாவது:முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேசம் விரைவில் வளமான மாநிலமாக உருவெடுக்கும். 

யோகி ஆதித்யநாத், மோடி
வறுமையை ஒழிக்கவும், மக்கள் நலனை உறுதிப்படுத்தவும் ராமராஜ்யம் நிறுவப்பபடுகிறது. சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் தீய போக்குகள், அநியாயம், கொடுங்கோலர்களின் தாக்கம் அதிகரிக்கும்  போதெல்லாம், மக்களை காக்க நான் அவதாரம் எடுக்கிறேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். அதேபோல், உத்தர பிரதேசத்தில் யோகி ஜி சாமானியர்களை பாதுகாக்க தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 2024ம் ஆண்டுக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இரட்டிப்பாகியுள்ளது. 

சாலைகள்

2024ம் ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் ரூ.5 லட்சம் கோடி  மதிப்பிலான சாலைப் பணிகள் நடைபெறும். பாபா கோரக்ஷநாத்தின் இந்திய புண்ணிய பூமியில் இந்த திட்டங்கள் தொடங்கப்படுவதோ அல்லது அடிக்கல் நாட்டப்படுவதோ உத்தர பிரதேசத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கும் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும். புதிய வேலைப்வாய்ப்புகள் உருவாக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதன் மூலம் உத்தர பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.