காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்!

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்!

புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நமச்சிவாயம் வெற்றிபெற்ற நிலையில், தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். இதனால் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராகவும், அமைச்சராகவும் பொறுப்பில் இருந்து வந்த நிலையில், அவர் ஓராண்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பல மாதங்களாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். அத்துடன் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம், பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்!

இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக விடுக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது முழு உரிமை கொடுக்கப்பட்டது. அமைச்சராக சுதந்திரமாக செயல்பட்டார். ஆனால் அவர் கட்சிக்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டார். இதன் காரணமாக அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவருடன் செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.