ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு

 
d d

நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் விபத்து எதிரொலியாக நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து லெவல் கிராசிங்கிலும் வேகத்தடைகள், அபாய எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார். இன்டர்லாக் செய்யப்படாத அனைத்து வாயில்களிலும், குரல் பதிவு அமைப்பு செயல்படுவதை DRM உறுதிப்படுத்த வேண்டும், ரயில்வே கேட்டுகளில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் ஏற்படும் இடங்களுக்கு ரயில்வே போலீசார் மூலம் பாதுகாப்பு வழங்கவேண்டும், அனைத்து ரயில்வே கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும், ரயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து ரயில்வே கேட்டுகளையும் 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். என்பன உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.