விளைபொருட்களுக்கு 5 ஆண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
Mar 9, 2024, 08:27 IST1709953026210
அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்து சட்டமாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நெல்லுக்கான ஆதார விலை 2,183 ரூபாயாகவும், முதல் தர நெல்லின் விலை 2.203 ரூபாயாகவும், சோளத்துக்கான ஆதார விலை 3,225 ரூபாயாகவும், கம்புக்கான ஆதார விலை 2,500 ரூபாயாகவும் உள்ளது.
இந்நிலையில் விவசாய விளைபொருட்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பருப்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட விளை பொருட்களுக்கு 5 ஆண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்; மத்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் .மத்திய அரசின் முடிவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.