நாளை நாடு முழுவதும் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாளை நாடு முழுவதும் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதுவரை உலகம் முழுவதும் 11,267,309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 530,754 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர. மேலும் 6,059,565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

நாளை நாடு முழுவதும் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறக்கப்பட உள்ளன. அதனால் அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மண்டலங்களில் மட்டுமே அருங்காட்சியகங்களும் நினைவிடங்களும் திறக்கப்படும் என்றும் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்றும் கொரோனா அறிகுறி இல்லாவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.