விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த பாஜக நிர்வாகியின் பண்ணை வீடு..

 
Bernard N Marak Rimbu - பெர்னார்டு என். மராக் ரிம்பு.

மேகாலய பாஜகவின் மாநில துணைத்தலைவரின்   பண்ணை விடு விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து 6 சிறுவர்களை மீட்ட போலீசார்,  73 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Bernard N Marak Rimbu - பெர்னார்டு என். மராக் ரிம்பு.

  மேகாலய பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்து வருபவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு.  இவருக்கு மேற்குகரோலின் மாவட்டத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.  இந்நிலையில் நேற்று போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில்   பண்ணை வீடு விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   அங்கிருந்து நான்கு சிறுவர்கள்,  இரண்டு சிறுமிகளை  மேகாலயா காவல்துறையினர்  மீட்டுள்ளனர். சுகாதாரமற்றிருந்த அறையில் இருந்து மீட்கப்பட்ட  அந்த 6 சிறார்களும்  சரியாக பேச முடியாத நிலையில் இருந்துள்ளனர்.  மீட்கப்பட்ட ஆறு பேரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

Bernard N Marak Rimbu - பெர்னார்டு என். மராக் ரிம்பு.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்திய  காவல்துறையினர்  73 பேரை கைது செய்துள்ளனர்.  மேலும்  பண்ணை  வீட்டில் இருந்த 36 வாகனங்கள்,  416 மது பாட்டில்கள், 49 மொபைல் ஃபோன்கள் மற்றும் மேலும் சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அந்த பண்ணை வீட்டில்  30  சிறிய அறைகள் இருந்ததும் காவல்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாஜக நிர்வாகி பெர்னார்டு என். மராக் ரிம்பு  விசாரணைக்கு ஒத்துழைத்து உடனடியாக சரணடையுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.   ஆனால் மேகாலயா முதல்வர் தனக்கு எதிராக அரசியல் சதி  செய்வதாக பெர்னார்டு என். மராக் ரிம்பு குற்றம் சாட்டியுள்ளார்.  இந்நிலையில் பாஜக நிர்வாகி மீது  ஏற்கனவே 25க்கும் அதிகமான குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.